யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வாதங்களை முன்வைத்த போது வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சாலிய பீரிஸ், கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் சார்பில் முன்னிலையானார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியுள்ள இந்த அமைச்சர்கள் மூன்று பேரையும் அமைச்சரவையிலிருந்து நீக்கி இருக்க வேண்டும் என்ற போதிலும் அது நடக்கவில்லை எனவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.