follow the truth

follow the truth

December, 18, 2024
Homeஉலகம்உகண்டாவில் மர்ம காய்ச்சல் - 300 பேர் பாதிப்பு

உகண்டாவில் மர்ம காய்ச்சல் – 300 பேர் பாதிப்பு

Published on

உகண்டா நாட்டின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் இந்நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நோய் பரவிய மாவட்டத்தின் சுகாதாரத்துறை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

இச்சிகிச்சையினால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் குணமடைந்து விடுவதாகவும். புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்நோய் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோயிக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சிடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரஷ்ய அணுசக்தி பாதுகாப்புப் படைகளின் தலைவர் கொலை

ரஷ்யாவின் மொஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின்...

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

மயோட்டா தீவை புரட்டிய புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும்...