வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜாங் இல்லின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந் நாட்டு குடிமக்கள் 11 நாட்களுக்கு சிரிப்பதற்கு, மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் திகதி உயிரிழந்ததால், தற்போது வடகொரியாவை Kim Jong Il-ன் மூன்றாவது மகன் ஆன, கிம் ஜாங் உன் மூன்றாவது தலைமுறையாக ஆண்டு வருகிறார்.
இந்நிலையில், வட கொரிய மக்கள் மது அருந்துவது, சிரிப்பது, மளிகை பொருட்கள் வாங்குவது அல்லது ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சினுய்ஜூவில் வசிக்கும் நபர் ஒருவர் ரேடியோ Radio Free Asia விடம் தெரிவித்துள்ளார்.
கிம் ஜோங் இல் இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும். ஆனால் இது கிம் ஜோங் இல் இறந்து 10 – வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.