கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த ஆறு வர்த்தகர்களுக்கு ஏழு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்ததாகவும், குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.
கடந்த 10ஆம் திகதி முதல் நேற்று (16) வரை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 342 வர்த்தகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக்வும் இவர்களுக்கு எதிராக அந்தந்த நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.