follow the truth

follow the truth

December, 17, 2024
HomeTOP2கொரோனா உடல்களை தகனம் செய்தமை குறித்த தகவல் அளிக்க முடியாது என அரசு தெரிவிப்பு

கொரோனா உடல்களை தகனம் செய்தமை குறித்த தகவல் அளிக்க முடியாது என அரசு தெரிவிப்பு

Published on

நாட்டைப் பாதித்த கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்தமை தொடர்பில் அறிக்கை தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கடந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தகவல்களை வழங்கவில்லை எனவும், தற்போதைய அரசாங்கமும் இது தொடர்பான தகவல்களை மறைத்து வருவதாகவும், இது நாட்டின் சுகாதார அதிகாரிகளையும் அவமானப்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இது தகவல்களை மறைப்பதில் உள்ள பிரச்சினையல்ல, மருத்துவ நெறிமுறைகளில் உள்ள பிரச்சினையாகும்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 13,183 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் விவரங்களை வெளியிட அனுமதிக்கப்படவில்லை என்றும், அப்போதைய அரசாங்கத்தின் முடிவுகள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை என்றும் அவர் கூறினார்.

புதிய அரசாங்கம் இந்த தகவலை மறைக்க நினைக்கவில்லை என தெரிவித்த அமைச்சர், சட்டமா அதிபருடன் கலந்துரையாடி பதில் அளிப்பதாக மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...

தனது கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

யோஷித குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி...