follow the truth

follow the truth

December, 17, 2024
HomeTOP2நோய்க்கு சிகிச்சை பெற மட்டுமே வர முடியும் : அர்ச்சுனாவுக்கு என்ன ஆனது...?

நோய்க்கு சிகிச்சை பெற மட்டுமே வர முடியும் : அர்ச்சுனாவுக்கு என்ன ஆனது…?

Published on

பெரும்பாலும் கதைகள் கட்டவிழ்த்து விடப்படுவதே.. அதுபோல இன்னொரு கதை சொல்லப் போகிறேன்…

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அல்லாமல் வேறு எக்காரணம் கொண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்டால் உடனடியாக அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் நேற்று (16) வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தாக்க முயன்றால், அவரை திருப்பித் தாக்காது, பாதுகாப்பு நுழைவாயிலை மூடி பொலிஸாருக்கு அறிவிக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளாராம்..

வைத்தியசாலைப் பணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினரை ‘சார்’ என அழைக்காத காரணத்தினால் கோபமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நுழைந்து திடீரென தாக்கி அழிவுகளை ஏற்படுத்தலாம் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குக் காரணம் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்.போதனா வைத்தியசாலையை முன்னர் முற்றுகையிட்டு அமைதியின்மையுடனும் வன்முறையுடனும் நடந்துகொண்ட போது வைத்தியசாலைப் பணிப்பாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததில் பிடிவாதமாக இருந்து யாழ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டும் வகையில் நீண்டநேரம் பேசினார்.

பொலிசார் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகிய அர்ச்சுனா எம்.பி., ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக...

தனது கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

யோஷித குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி...