சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது.
நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து இந்தியாவில் 9.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் முதலீடு செய்துள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால் சமீபகாலத்தில் இந்த முதலீடு அதிகரித்துள்ளது. 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தின் முதலீடு 53% வரை அதிகரித்துள்ளது.