ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் (Stephane Dujarric) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன். நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.