பிரிட்டனில் ஒமிக்ரோன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
முக்கியமான காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணம் செய்ய முன்னர் கொரோனா தொற்று பரிசோனையை செய்வதற்குரிய காலப்பகுதிய இதுவரை 48 மணிநேரமாக இருந்த நிலையில் அது தற்போது 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒமிக்ரோன் தொற்று இதுவரை குறைந்தது 77 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.