கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் இன்று எடுத்து கொள்ளப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.