follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP2மஹிந்தவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவு

மஹிந்தவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவு

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று தங்களது கடமைகளை நிறைவு செய்து வெளியேறினர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே, அவருக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60ஆக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட தரப்பினருக்கான பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு அவர்களுக்காக ஒதுக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த செலவு 1,100 மில்லியன் ரூபாவாகும் எனவும் அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோழி இறைச்சி விலையில் மாற்றமில்லை

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை...

500 மில்லியன் இழப்பீடு கோரும் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித வௌியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக...

பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.. ரணிலால் கூட அது முடியவில்லை

கொழும்பு பங்குச்சந்தை வரலாற்றில் கண்டிராத நிலையை எட்டியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு கருத்து...