இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியன் என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை அன்று ஒரே நாளில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நாளில் 9,847 பேர் நாட்டுக்கு வந்துள்ளதாகச் சுற்றலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.