follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP2"முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்தால் நான் தான் முன்னிற்க வேண்டும் என்றல்ல. சமூகம் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள...

“முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வந்தால் நான் தான் முன்னிற்க வேண்டும் என்றல்ல. சமூகம் அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்”

Published on

முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகள் வரும் போது தான் முன்னிற்க வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தான் உடன்படுவதில்லை என்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

தனியார் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

“.. முஸ்லிம்கள் சம்பந்தமான விவகாரங்களுக்கு நான் பொறுப்புதாரி அல்ல. அதற்கு பொறுப்பாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் சார்ந்த பிரச்சினைகள் வரும் போது தான் முன்னிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றவர்கள், சமூகத்தின் நிலைப்பாட்டினை சிலர் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தெளிவில்லாமல் இருக்கின்றது. இவைகள் தொடர்பில் கட்சி என்னிடம் ஆலோசனைகளை கேட்டால் அதற்கு ஆலோசனையை நான் வழங்குவேன்..

வக்ப் சபையாக, ஹஜ் குழுக்களாக இருக்கலாம் இவர்கள் மக்களுடன் கலந்துரையாடாமல் நியமித்த வரலாறு தான் இருக்கின்றது. நமது அரசு அவ்வாறு இல்லை.

வக்பு சபைக்கு அழுத்தம் கொடுக்க என்னால் முடியாது. மேலும், எனது அமைச்சு அல்லாத எதிலும் நான் தலையிட மாட்டேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி...

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...