follow the truth

follow the truth

April, 15, 2025
HomeTOP2இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

Published on

கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக இதனைத் தெரிவித்தார்.

17 இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் சுமார் 440 மெற்றிக் தொன்கள் அரிசி உள்ளதாகவும் அதில் 130 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 300 மெற்றிக் தொன் புழுங்கல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த அரிசியை சுங்கத்தில் இருந்து விரைவில் அகற்றி பொதுமக்களுக்கு வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை சுங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொடக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு

தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார். உடல்நலக்குறைவால் இன்று (15) தனது 58 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். ஏப்ரல்...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தீர்ப்புகளை தேர்தல் அலுவலகத்திற்கு ஒப்படைக்க அறிவிப்பு

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளைக் குறித்த மாவட்டத்தின்...

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த...