follow the truth

follow the truth

December, 12, 2024
HomeTOP1பைசர் முஸ்தபா பொது உடன்படிக்கையின் மூலம் பரிந்துரைப்பு : புதிய ஜனநாயக முன்னணி

பைசர் முஸ்தபா பொது உடன்படிக்கையின் மூலம் பரிந்துரைப்பு : புதிய ஜனநாயக முன்னணி

Published on

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கட்சியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்குமாறு தினமும் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

2024 பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் கீழ் 4 பெரிய கட்சிகள் போட்டியிட்டன.

அவையே பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் புதிய கூட்டணி.

அதன்படி, பொதுத் தேர்தலில் 2 தேசிய பட்டியல் உறுப்பினர்களை புதிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியிருந்தது.

ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டார்.

ஆனால், கூட்டணி கட்சிகளின் உடன்பாடு இல்லாமல் இந்த நியமனம் நடந்ததாக பின்னர் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா அனுப்பியுள்ள கடிதத்தில் காஞ்சன விஜேசேகரவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் உடன்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர்...

இந்தியாவிலிருந்து 440 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி

கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால்...

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கறி மிளகாய், பச்சை மிளகாய், போஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலைகள்...