எவரும் புதிய வாகனத்தை மிகுந்த ஆர்வத்துடனேயே வாங்குவார்கள். ஆனால் சில நேரங்களில் வாங்கப்படும் வாகனத்தின் சில உண்மைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வாய்ப்பு உள்ளதா?
அது பற்றிய செய்தியே இது..
சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் வசதிகளை இலங்கை சுங்கத்துறை இணையம் மூலம் வழங்கியுள்ளது.
இதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் ஊடாக வாகனத்தின் செசி இலக்கத்தை உள்ளீடு செய்து வாகனத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
https://services.customs.gov.lk/vehicles
நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புழக்கத்தை குறைப்பது மற்றும் கார் சந்தையில் வெளிப்படைத்தன்மையை வளர்ப்பது இதன் நோக்கமாகும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இந்த வசதி 2002 க்குப் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கார்கள் மற்றும் 2011 க்குப் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களின் விவரங்களையும் உள்ளடக்கியது, வாகனம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பரிவர்த்தனைகளை முடிப்பதற்கு முன்பு சட்டப்பூர்வத்தன்மையை எளிதாக சரிபார்க்க உதவுகிறது.