follow the truth

follow the truth

December, 12, 2024
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படும்?

புலமைப்பரிசில் மீண்டும் நடத்தப்படும்?

Published on

செப்டெம்பர் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் டிசம்பர் 16ஆம் திகதி நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று(11) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு மீதான விசாரணையை வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைப்பதாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது தெரிவித்தது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும், முதல் வினாத்தாளை இரத்துச் செய்யுமாறும் கோரி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இணைந்து இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சட்டமா அதிபர் விராஜ் தயாரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரானதோடு, மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் ஆஜராகினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பைசர் முஸ்தபா பொது உடன்படிக்கையின் மூலம் பரிந்துரைப்பு : புதிய ஜனநாயக முன்னணி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள்...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல்...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்க புதிய நடைமுறை

எவரும் புதிய வாகனத்தை மிகுந்த ஆர்வத்துடனேயே வாங்குவார்கள். ஆனால் சில நேரங்களில் வாங்கப்படும் வாகனத்தின் சில உண்மைகளின் நம்பகத்தன்மையை...