இன்று பெருமளவிலான போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கஹதுடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் 05 கிலோ ஹெரோயின், 1.6 கிலோ ‘ஐஸ்’ மற்றும் 800 ‘எக்டசி’ மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை, 02 கிலோவுக்கும் அதிகமான ‘ICE’ போதைப்பொருளுடன் 20 வயதுடைய நபர் ஒருவர் பொரளை வனாத்தமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.