follow the truth

follow the truth

January, 6, 2025
HomeTOP1கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்றது அதானி குழுமம்

கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்றது அதானி குழுமம்

Published on

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. 

அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கு, அந்த குழுமத்தின் கோரிக்கைக்கு அமைய 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், குறித்த கோரிக்கையை அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதற்கமைய, கொழும்பு மேற்கு முனையத் திட்டத்துக்காக உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிப்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துணைவேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு...

Smart Youth மீதான விசாரணைகள் ஆரம்பம்

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஸ்மார்ட் யூத் நைட் கண்காட்சி மற்றும் கச்சேரி...

உரிய தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேரிடும்

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கமைய, மேற்கொள்ளப்படும் பேருந்து சோதனை நடவடிக்கை காரணமாக தங்களது தொழில்துறை தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக்...