follow the truth

follow the truth

December, 11, 2024
HomeTOP1பெருந்தோட்டங்களில் நிலவும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு

பெருந்தோட்டங்களில் நிலவும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு

Published on

பெருந்தோட்டங்களில் நிலவும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு 6 மாடிகளுக்கும் குறைவான வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத்தில் வீட்டுத் தேவை 150,000 க்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 7 பேர்ச்சஸ் ஒதுக்கி தனி வீடுகளை நிர்மாணித்தால், வீடுகளை நிர்மாணிப்பதற்கு பெருமளவிலான தோட்டக் காணிகளை ஒதுக்க வேண்டியிருக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனை பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 10,000 வீடுகளில் மேலும் 990 வீடுகளை மக்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெருமளவிலான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

இன்று பெருமளவிலான போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...

டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை மறுதினம்

அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளைய தினம் (12) வரவு...

எம்.பியானார் பைசர் முஸ்தபா – வர்த்தமானி வெளியீடு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால்...