follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுஉலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு

உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்ற இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு

Published on

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி (Khaled Nasser AlAmeri) இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் (கலாநிதி) அசோக ரன்வலவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார்.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உலக அரசாங்கங்களின் மாநாட்டில் உரையாற்றுமாறு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் இலங்கைக்கான தூதுவர், சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அரசாங்கங்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியிருந்ததாகவும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் குறித்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி உரையாற்றுவதை தாம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையென்றும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இது விடயத்தில் இலங்கையுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள ஐக்கிய அரபு இராச்சியம் தயாராக இருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிப்படையான மற்றும் ஈர்க்கக்கூடிய முதலீட்டு நடைமுறையை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தொழில்துறை சார்ந்தவர்களாகவும், அமைதியான சமூகத்தினராகவும் வாழ்வது தொடர்பில் நன்மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைகளை முன்னேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது. முதலீடுகளை விஸ்தரிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளவும் ஸ்தாபித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார்...

மே மாதத்தில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர்

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை அமுலுக்கு வந்தாலும், எதிர்வரும் மே மாதம் முதல் நுகர்வோர்...

தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு செலுத்துவார்கள் என்பதையும், சான்றளிக்கும் அதிகாரியையும் அடையாளம் காண உதவும் வகையில் 'இ'...