தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்குரைஞர் இதனை அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்தமை தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.