வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இரணடு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடம் கூடி முடிவெடுத்தது.
இந்த முடிவு கட்சியின் நான் உட்பட மற்றைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. எனினும், எமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன், அலிசப்ரி ரஹீம் ஆகிய மூவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இவ்வாறு கட்சியின் உயர்பீடம் எடுத்த தீர்மானங்களையும், யாப்பையும் மீறி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாகளித்தமையால் குறித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பில் விளக்கமளிக்குமாறும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் எமது கட்சியின் யாப்பின் பிரதி ஒன்றையும் கேட்டனர். அதன்படி, எமது கட்சியின் யாப்பின் பிரதி ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.