follow the truth

follow the truth

April, 20, 2025
Homeலைஃப்ஸ்டைல்முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Published on

முட்டை புரதச்சத்து அதிகமுள்ள, நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஓர் உணவுப் பொருள். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனைச் சாப்பிட சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதில் விட்டமின் ஏ, டி, ஈ, கே, பி2, பி6, பி12, போலேட், பயோட்டின் ஆகிய சத்துகளும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், ஜிங்க் ஆகிய தாதுக்களும் ஆன்ட்டி-ஆக்சிடன்ட் எனும் நோயெதிர்ப்புப் பொருள்களும் அதிகம் உள்ளன.

ஒரு முட்டையில் 75 கலோரிகள் உள்ளன. 7 கிராம் புரோட்டீன், 5 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் இரும்பு, வைட்டமின், தாதுக்கள், கரோட்டினாய்டுகள் ஆகியவை உள்ளன.

இதுவரை 20 அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 11 அமினோ அமிலங்களை உடலே உற்பத்தி செய்யும். எஞ்சிய 9 அமினோ அமிலங்களை உணவு மூலமாகவே உடல் பெற முடியும். இந்த அத்தியாவசிய 9 அமினோ அமிலங்கள் கொண்ட ஒரே உணவுப்பொருள் ‘முட்டை’ என்பது கூடுதல் தகவல்.

வெள்ளைக்கருவில் ஒரு சதவீதம் கூட கொழுப்பு கிடையாது. எனவே டயட்டில் இருப்பவர்கள் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுகின்றனர்.

ஆனால், முட்டையின் முழுச் சத்துகளைப் பெற இரண்டையும் அதாவது முழுவதுமாக முட்டையை சாப்பிட வேண்டும் என்றே மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

மஞ்சள் கருவில் கலோரி அதிகம் என்றாலும் அதில் சத்துகள் நிறைந்திருப்பதால் அதையும் சாப்பிடவே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கண்கள், மூளை, இதயம், தசைகள் என ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமான உணவுதான் முட்டை.

முட்டை ஒரு முழுமையான புரதம் மிக்க உணவு. எனவே, இதனை தினமும் சாப்பிடலாம்.

தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முட்டை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் முட்டை உடல் எடையைக் குறைக்கிறது.

முட்டையை தனியாக சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்து கிடைப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும். இது உடலில் கொழுப்பைக் கரைக்கிறது. பசியைக் குறைக்கிறது. கலோரி குறைவு என்பதாலும் உடல் எடை அதிகரிக்காது.

முடிந்தவரை மற்ற உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டையில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்ற கொழுப்பு அமிலம் உள்ளதால் உடல் எடையைக் குறைப்பதுடன் இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் முட்டையில் நோயை எதிர்க்கக்கூடிய சத்துகள் உள்ளன.

பெரியவர்கள் நாள் ஒன்றுக்கு 2-3 முட்டை தாராளமாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் தினமும் ஒன்று கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அதேநேரத்தில் முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவது தொற்றை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

அதாவது ஹாப்-பாயில், அப்படியே குடிப்பதைத் தவிர்க்கவும். மாறாக முட்டையை அவித்தோ, ஆம்லெட் அல்லது பொடி மாஸ் செய்தோ சாப்பிடலாம். அதாவது முழுவதுமாக வேகவைத்து சாப்பிடலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...

நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்து குடும்பத்தினர் அறிக்கை வெளியீடு

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'வழக்கு எண் 18/9' திரைப்படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீ தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்...

எலும்பை பாதிக்கும் உணவுகள் சில..

எலும்பை பாதிக்கும் உணவுகள் குறித்து இன்று நாம் அலசுவோம்..  சோடா பானங்கள்: செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா சேர்த்த பானங்களை...