அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். அவுஸ்திரேலிய மண்ணில் 3 வகை கிரிக்கெட்டிலும் அவர் 10 சதங்களை அடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோலி படைத்திருந்தார். இந்த நிலையில் வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடித்தால் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்வார்.
1930-1948-ம் ஆண்டு காலகட்டங்களில் விளையாடிய பிராட்மேன் இங்கிலாந்தில் 11 சதத்தை அடித்தார். கோலியும் ஆஸ்திரேலியாவில் 11-வது சதத்தை அடித்தால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பிராட்மேனின் உலக சாதனையை கோலி சமன் செய்வார்.
இந்த சாதனை பட்டியலில் ஜேக் ஹோப்ஸ் (அவுஸ்திரேலியாவில்), சச்சின் டெண்டுல்கர் (இலங்கையில்) தலா 9 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்தில் 8 சதங்கள் அடித்த சர் விவ் ரிச்சர்ட்ஸ் 4-வது இடத்தில் உள்ளார்.