இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 04 இலட்சம் பயனாளிகளின் நிவாரண உதவித்தொகையை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 04 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய பயனாளிகளின் கொடுப்பனவுகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், எட்டு இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்கள் பெற்றுக்கொண்ட 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.