follow the truth

follow the truth

February, 5, 2025
HomeTOP2பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த இஸ்ரேல் அரசு தடை

Published on

இஸ்ரேல் நாட்டில் உள்ள பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்குமாறு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிவாயல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் இதாமர் பென் க்விர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

“பள்ளிவாயல்களில் இருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விஷயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலின் வலையில் சிக்க வேண்டாம் – போராட்டத்திற்கு தயாராகும் SJB

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய...

டிரம்ப் மற்றும் நெதன்யாகு சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு ஒன்று...

ஸ்வீடன் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : 10 பேர் பலி

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான...