ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு குறித்த மூன்று வினாக்களுக்கு மாணவர்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர், திங்கட்கிழமை (02) அறிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முழு நீதியரசர்கள் குழு முன்னிலையில் பரிசீலிக்குமாறும் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.