மாவீரர் கொண்டாட்டங்களை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியலை களங்கப்படுத்திக்கொள்ளும் செயற்பாடாகும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் எந்தவித பக்குவத்தையும் காட்டவில்லை எனவும் இவ்வாறான நடவடிக்கைகளின் பலனை அரசாங்கம் மட்டுமன்றி அரசாங்கத்தின் நியமனத்திற்காக நின்றவர்களும் அனுபவிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஒருவரைக் கைது செய்வதன் மூலம் பொய்ப் பிரசாரங்களை கட்டுப்படுத்த முடியும் என நினைப்பது தவறானது எனவும், போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் காலகட்டத்தில் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு பாரிய ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
பேராசியர் தேவசிறி அவரது இணைய சேனல் மூலம் ஒரு வீடியோவை வெளியிட்டு, தற்போதைய அரசாங்கத்தை விடவும் நிலையான பிரபல்யத்தைக் கொண்டிருந்த ராஜபக்ச அரசாங்கம், அரச அடக்குமுறைகள் காரணமாக வீழ்ச்சியடைந்தது என நிர்மால் தெவ்சிறி நினைவுகூர்ந்தார்.