follow the truth

follow the truth

December, 1, 2024
HomeTOP1தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்த பிரித்தானிய பிரஜை கைது

தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்த பிரித்தானிய பிரஜை கைது

Published on

தீவிரவாத கும்பலுக்கு பணம் வசூலித்த பிரித்தானிய அரசை சேர்ந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினரால் பெறப்பட்ட பயணத் தடை உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, ​​குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவினர் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேரூந்து கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட...

வாகன இறக்குமதி பற்றிய விசேட அறிவிப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்...

பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு விசேட வேலைத்திட்டம்

டிசம்பர் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை...