சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளை மீட்பதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
அதேபோல், சேதமடைந்த அனைத்து நீர்ப்பாசன வசதிகளையும் மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் செய்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிகபட்சமாக 40,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.