இடைநிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற 2 ஜனாஸாக்கள் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மீட்புப்பணிகள் நேற்று இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆரம்பமாகி இருந்தது.
இதன்போது எஞ்சிய இரு ஜனாஸாக்களும் ஆங்காங்கே கிடந்த நிலையில் மீட்புக்
குழுவினரால் மீட்கப்பட்டன.
அத்துடன் குறித்த சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது உடலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஜனாசாக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
நேற்று(27) மாலை வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.