நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து இன்று (27) அடுத்த 06 மணித்தியாலங்களில் புயலாக வலுவடையும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.