இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் நேற்று (25) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அந்த அரிசி மூடைகளில் 2022ஆம் ஆண்டு காலாவதி திகதி இருந்ததாகவும், ஆனால் களஞ்சியசாலை உரிமையாளர் திகதியை 2024 என மாற்றி புதிய லேபிள்களை பயன்படுத்தி அரிசியை மீண்டும் பொதிசெய்து களஞ்சியசாலையில் சேமித்து வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அரிசிப் பொதிகளில் அச்சிடப்பட்ட விலை மற்றும் நிறைகள் என்பன மாற்றப்பட்டு கொழும்பு 14 பகுதியிலுள்ள களஞ்சியசாலையில் வைக்கப்பட்டு எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, உற்பத்தித் திகதி மாற்றப்பட்ட 25 கிலோகிராம் அரிசி பொதிகள் 717 நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.