பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை டிசம்பர் 6 அல்லது அதற்கு முன் அவர்கள் போட்டியிட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 6 அல்லது அதற்கு முன் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.