அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜீ.என்.ஆர்.டீ.அல்போன்ஸூ ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற சந்திப்பிலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய வலுசக்தி,நவீன விவசாயம் மற்றும் காலநிலை அனர்த்த துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
மேற்படி துறைகளில் அரச துறையின் நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள், அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.