2025 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, 2025ம் நிதி ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், 2025 முன்கூட்டிய ஒதுக்கீடு தொடர்பான மூன்றாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.