இலங்கையின் எரிசக்தித் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
போட்டித்தன்மை கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை எளிதாக்குதல், எரிசக்தி உற்பத்தி செலவைக் குறைப்பதனை இலக்காகக் கொண்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகபூமி கடோனோ குறிப்பிட்டுள்ளார்.