மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர். க. கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 400 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனர்த்தத்தை தடுக்க மன்னார் மாவட்டத்தில் முப்படையினர், பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.