ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காவிடின் மீண்டுமொரு அரசியல் தீர்மானத்தை எடுக்க வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.