follow the truth

follow the truth

November, 25, 2024
HomeTOP2அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் - சபாநாயகர்

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்

Published on

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாகனம் மற்றும் இல்லங்களை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரவில்லை.

எவ்வாறாயினும், தூரப் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சமயங்களில் பல நாட்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய ஏற்படலாம் எனவே, தூரத்தின் அடிப்படையில் குறித்த வசதிகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே, தகுதியானவர்கள் இனங்காணப்பட்டுக் குறித்த வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனச் சபாநாயகர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகச் சபாநாயகரினால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா எனச் சபாநாயகரிடம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே, அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முடியாது.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது.

எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.

அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.

எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“சும்மா விட மாட்டோம்..” மற்றொரு அரபு நாட்டை எச்சரிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்த போர் மேலும்...

IMF ஒப்பந்தத்தை உடைக்க முடியாது.. – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்...

வாகனமும் தங்க இடமும் வேண்டும்.. – அமைச்சர் சரோஜா போல்ராஜ்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் அமைச்சகம் வழங்கும் வாகனத்தை தான் பயன்படுத்த...