follow the truth

follow the truth

November, 22, 2024
Homeஉள்நாடுஎச்.எஸ்.இஸ்மாயில் முதல் ரிஸ்வி சாலி வரை

எச்.எஸ்.இஸ்மாயில் முதல் ரிஸ்வி சாலி வரை

Published on

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றின் சபாநாயர் பதவியை மூன்று முஸ்லிம் தலைவர்கள் வகித்துள்ளனர். அத்தோடு பிரதி சபாநாயகராக பல முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்துள்ளனர்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கத்தில் புத்தளம் தொகுதியிலிருந்து சுயாதீன உறுப்பினராக தெரிவாகிய எச்.எஸ்.இஸ்மாயில் (19 April 1956 – 05 December 1959) ஏகமனதாக சபாநாயகர் பதவிக்கு தெரிவாகியிருந்தார். இவர்தான் இலங்கையில் தெரிவாகிய முதலாவது முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சபாநாயகராவார்.

1978 ஜே.ஆர். அரசாங்கத்தில் பேருவளை தொகுதி உறுப்பினராக தெரிவாகிய பாக்கீர் மாக்கார் (21 September 1978 – 30 August 1983) சபாநாயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் காலிமுகத்திடலிலுள்ள பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவி வகித்த இறுதி சபாநாயகரும், ஜயவர்தனபுறக்கோட்டையிலுள்ள புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் பதவி வகித்த முதலாவது சபாநாயகரும் ஆவார்.

1989 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாஸ அரசாங்கத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச். முஹம்மத் (09 March 1989 – 24 June 1994) சபாநாயகராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு அடுத்த பதவி நிலையான பிரதி சபாநாயகராகவும் பல முஸ்லிம்கள் பதவி வகித்துள்ளனர்.

எஸ்.எச். இஸ்மாயில் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக (14 February 1951 – 08 April 1952) இருந்ததுடன், இரண்டாவது பாராளுமன்றத்திலும் இஸ்மாயில் பிரதிசபாநாயகராக (10 June 1952 – 18 February 1956) பதவி வகித்துள்ளார்.

சேர் ராஷிக் பரீத் (28 September 1967 – 28 February 1968) இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.

பேருவளை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஐ.ஏ.காதர் 7 ஆவது பாராளுமன்றில் பிரதி சபாநாயகராவும் (07 June 1970 – 22 May 1972), முதலாவது தேசிய அரசுப் பேரவையின் (First National State Assembly) பிரதிசபாநாயராக (22 May 1972 – 18 May 1977) பதவி வகித்துள்ளார்.

இரண்டாவது தேசிய அரசுப் பேரவையின் பிரதி சபாநாயகராகவும் பேருவளை தொகுதியைச் செர்ந்தவரான பாக்கீர் மாக்கார் பதவி வகித்தார். பாக்கீர் மாக்கார் (04 August 1977 – 07 September 1978) பிரதி சபாராயகராக பதவி வகித்த பிறகு முதலாவது இலங்கை சேஷலிச ஜனநாயக குடியரசின் சபாநாயகரானார்.

இந்நிலையில் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் டாக்டர் ரஷ்வி ஷாலி பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

எஸ்.என்.எம்.சுஹைல்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

காலி, நாகொடை பத்தேகம வீதியில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இரும்புப் பாலத்தில்...

புதிய போக்குவரத்து திட்டம் – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்றம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினுள் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையில் புதிய முறை...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான்...