follow the truth

follow the truth

November, 19, 2024
HomeTOP1லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம்

லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம்

Published on

மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத வாகனம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த பிணை மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. 

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்ன அந்தக் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், அதற்கான குறுகிய திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க டிசம்பர் 9 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சபை முதல்வராக பிமல் ரத்நாயக்க நியமனம்

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை...

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

தியத்தலாவையில் ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டியில் இருந்து பதுளை...

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ

அமைச்சரரையின் ஊடக பேச்சாளராக அமைச்சர் வைத்தியர் நளிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.