டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால், சுவாச பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
டெல்லியில் நடப்பு பருவத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று காற்று மாசு தரக்குறியீடு 481 என்ற அளவில் பதிவாகியுள்ளது. காற்றின் தரக் குறியீடு 100ஐ தாண்டினாலே அது, சுவாசிக்க ஏற்றது இல்லை என்ற நிலையில், டெல்லியில் காற்று மாசு 450ஐ கடந்துள்ளது.
ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய 160 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் 7 விமானங்கள் முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 30 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.