இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஹரிணி அமரசூரிய இம்முறை 655,289 அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.