ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், ஏற்கனவே பரவி தற்போது இந்த வைரஸ் திரிபு 77 நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒமிக்ரோன் பெரும்பாலான நாடுகளில் உள்ளது எனினும் அது இன்னும் அங்கு கண்டறியப்படவில்லை. நாம் வேறு எந்த வகையிலும் காணாத வேகத்தில் ஒமிக்ரோன் பரவுகிறது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரல் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் பரவலை தடுக்க கொவிட் தடுப்பூசி மட்டும் போதாது,முகக் கவச பயன்பாடு, சமூக இடைவேளை, காற்றோட்டம் மற்றும் கை சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.