follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP2நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

நிலுவைத்தொகை செலுத்தத் தவறினால் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த தீர்மானம்

Published on

நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று அழைக்கப்பட்ட போதே மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்த ஐந்து நிறுவனங்களும் செலுத்தாத வரிப்பணத்தின் பெறுமதி ஆறு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக வழக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உரிய வரிப்பணத்தை வசூலிக்குமாறு மதுவரி ஆணையர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும், வரி செலுத்துவதை புறக்கணிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்...

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச்...

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவுபெற்றது. இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான...