பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைத்தள கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.