பிரான்சில் நடைபெறும் யுனெஸ்கோ கலாசார மரபுரிமை குழுவின் 16 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பாரம்பரிய ‘தும்பர’ பின்னற்கலைக்கு யுனெஸ்கோ கலாசார மரபுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் சிரேஷ்ட பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரே மற்றும் யுனெஸ்கோவின் இலங்கை கிளையின் செயலாளர் நாயகம் கலாநிதி புஞ்சிநிலமே மீகஸ்வத்த ஆகியோர் தலைமை தாங்கும் இந்த கூட்டத்தை பிரான்சிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகின்றது.
இக் கூட்டத்தொடரில் 184 நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உட்பட சுமார் 800 பேர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக பங்கேற்றனர்.
மேலும் யுனெஸ்கோ கலாசார பாரம்பரியக் குழுவின் 16வது அரசுகளுக்கிடையேயான கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.