முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்த சர்ச்சைக்குரிய V8 வாகனம் நேற்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சொகுசு ரக வாகனம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் 2010 ஆம் ஆண்டு அனுமத்திரத்துடன் கொண்டு வரப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பதிவு செய்யப்படாது பயன்படுத்தப்பட்டிருந்தது.